Home Sports IPL 2023: மும்பை அணியிலிருந்து’…ட்ரேடிங் மூலம் செல்ல வாய்ப்புள்ள 5 வீரர்கள்: ஸ்டார் பௌலருக்கும் இடம்!

IPL 2023: மும்பை அணியிலிருந்து’…ட்ரேடிங் மூலம் செல்ல வாய்ப்புள்ள 5 வீரர்கள்: ஸ்டார் பௌலருக்கும் இடம்!

118
0

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ட்ரேடிங் மூலம் வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎலில் அதிக கோப்பை வென்ற அணியாக திகழ்ந்தாலும், கடந்த இரண்டு சீசன்களில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. குறிப்பாக கடந்த சீசனுக்கு முன் அந்த அணி ஹார்திக் பாண்டியா, டி காக், போல்ட், க்ருனால் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களை கழற்றிவிட்டுவிட்டு இளம் வீரர்களை களமிறக்கி படுமோசமாக சொதப்பியது.

இந்த குறையை அடுத்த சீசனுக்குள் சரிசெய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், பலத்த அடியை வாங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், மும்பை அணி தங்களது அணியில் இருக்கும் வீரர்களை ட்ரேடிங் மூலம் விட்டுக்கொடுத்து மாற்று வீரர்களை வாங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அவர்களில் 5 வீரர்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக 2 போட்டிகளில் விலகியபோது அன்மோல்பிரித் சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு போட்டிகளில் அவர் 13 ரன்களை மட்டுமே அடித்தார். அணியில் ஏற்கனவே திலக் வர்மா மிகச்சிறப்பாக விளையாடி வருவதால், அன்மோல்பிரித் சிங்கின் தேவை அதிகம் இருக்காது. இதனால், இவரை விட்டுக்கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கு முன், சையத் முஷ்டாக் அலி தொடரில் கேளர அணிக்காக 7.95 என்ற எகனாமியில் மிகச்சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இதனால்தான், மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வாங்கியது. ஆனால், மும்பைக்காக 9.50 எகனாமியில் பந்துவீசி சொதப்பினார். இவரை ட்ரேடிங் செய்ய வாய்ப்புள்ளது.

மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர். இருப்பினும் கடந்த சீசனில் முருகன் அஸ்வின் 7.86 எகனாமியில் சிறப்பாக பந்துவீசியதால், மார்கண்டேவுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இவரை பெஞ்சில் அமர வைப்பதற்கு பதிலாக ட்ரேடிங் செய்தால், நிச்சயம் மாற்றாக தரமான வீரர் கிடைக்க வாய்ப்புள்ளது.