சச்சினுக்கே இடமில்லை… ஆனா ஒரே ஒரு இந்தியருக்கு இடம்: உலகக்கோப்பை லெவனை வெளியிட்ட அப்ரிதி!

சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு பின் அதிக போட்டிகளில் பங்கேற்றவர் இந்திய ஜாம்பவான் சச்சின். இவர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் 45 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

6 சதங்கள்
மேலும் உலகக்கோப்பை அரங்கில் சச்சின் ஜாம்பவான் சச்சின், 2278 ரன்கள் அடித்துள்ளார். இவரின் சராசரி 56.92 ஆகும். இதில் 6 சதம் மற்றும் 15 அரைசதங்கள் அடித்துள்ளார் சச்சின். மேலும் உலகக்கோப்பை அரங்கில் இவர் 241 பவுண்டரிகள், 27 சிக்சர்கள் விளாசியுள்ளார். இவ்வளவு சாதனைகள் படைத்த போதும் பாகிஸ்தான் வீரர் அப்ரிதியின் ஆல்டைம் உலகக்கோப்பை லெவனில் சச்சினுக்கு இடமில்லை.

5 பேட்ஸ்மேன்கள்
அப்ரிதி லெவன் அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் சையது அன்வர், கில்கிறிஸ்ட், பாண்டிங், விராட் கோலி, இன்சமாம். இதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்த ஜாக் காலிஸ் இடம் பெற்றுள்ளார்.
பவுலிங்கை பொறுத்தவரையில் வாசிம் அக்ரம், கிளன் மெக்ரா, சோயிப் மாலிக் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக் ஆகியோர் உள்ளனர். உலகக்கோப்பை அரங்கில் அன்வர் 915 ரன்களும், கில்கிறிஸ்ட் 1085 ரன்களும் அடித்துள்ளனர். மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் வெற்றிக்கேப்டனாக ஜொலித்த ரிக்கி பாண்டிங்கும் இடம் பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து ஜாம்பவான் சச்சின் இந்த லெவன் அணியில் இடம் பெறவில்லை என்றாலும், கோலி இடம் பெற்றுள்ளார்.

Previous post கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?
Next post கொரோனா ஊரடங்கு: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?