கூந்தல் மெலிந்து சிக்குபடிந்து இருந்தால் அதை நீங்கள் வெறுக்க செய்யாதீர்கள். சற்று கவனம் எடுத்தால் கூந்தல் இழந்த ஆரோக்கியத்தை
கூந்தல் மெலிந்து இருக்க பல காரணங்கள் இருக்கலாம். மாசுபாடு, ரசாயன அடிப்படையிலான ஷாம்புகள் மற்றும் மோசமான நீரின் தரம் போன்றவை முடியை பாதிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்பு சொல்லும் எளிய வழிமுறைகள் உங்கள் கூந்தலை வலுப்படுத்தி வளமானதாக ஆக்கும். அப்படியான குறிப்புகளை இப்போது தெரிந்துகொள்வோம்.
இன்றைய காலத்தில் மாசு, இராசயன பயன்பாடு போன்றவற்றால் முடி வளர்ச்சியை மோசமாக எதிர்கொள்கிறார்கள். இதில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். ஆயுர்வேதத்தில் நாம் கூந்தல் ஆரோக்கியத்துக்கான குறிப்புகளை பெறலாம். இது முடி வளர்ச்சி மற்றும் அதன் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க பல குறிப்புகளை நமக்கு அளித்துள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஆயுர்வேதத்தின் படி கூந்தல் உதிர்வு தடுக்கவும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கவும் கற்றாழை ஒரு இயற்கை தீர்வு என்று சொல்லலாம். இது உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடால் முடி இழப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை எடுத்து உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைமுடிக்கு மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தாலே முடி உதிர்தல் நின்று முடிக்கு ஊட்டம் கிடைத்து முடி ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.
ரீத்தா பூந்திக்கொட்டை என்று அழைக்கப்படும் இது இயற்கையான ஷாம்பு என்று சொல்லலாம். இது முடி மெலிந்துபோனவர்களுக்கு ஏற்ற ஒன்று. வெகு எளிதாக வீட்டில் தயாரிக்க கூடிய இதை தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்கள் ஷாம்புவை உபயோகிக்கவே மாட்டீர்கள்.