Home News `கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா?’ – பிரதமரை சாடிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்

`கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா?’ – பிரதமரை சாடிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்

66
0

கொரோனா பேரிடரை இந்திய அரசு எதிர்கொள்ளும்விதம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். `முன்கூட்டியே திட்டமிடல் என்பதை உங்களிடம் பார்க்க முடியவில்லை’ எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

`அரசமைப்புச் சட்டத்தின் வழி நடக்க வலியுறுத்தும் குழு’ (constituition conduct group) என்பது இந்திய மற்றும் மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு. இதில் 116 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். `இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின்படியே நாட்டின் நிர்வாகம் நடைபெற வேண்டும்’ என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கும் அமைப்பாகவும் இது உள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசின் தவறுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு கடந்த 20 ஆம் தேதி இந்த அமைப்பினர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தில் நேர்மையான காவல் ஆணையராக அறியப்பட்ட ஜூலியோ ரிபைரோ, முன்னாள் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜி.பாலச்சந்திரன் உள்பட 116 பேர் கையொப்பமிட்டுள்ளனர். பிரதமருக்கு சிசிஜி அனுப்பியுள்ள கடிதம்: “பிரதமர் அவர்களுக்கு, இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான நாங்கள், அரசமைப்புச் சட்டத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தவித அரசியல் சார்பும் கிடையாது. இதற்கு முன்னால் நிர்வாக செயல்முறைகள் எப்போதெல்லாம் அரசமைப்புச் சட்டத்தினை மீறுவதாக இருந்ததாகக் கருதினோமோ அப்போதெல்லாம் நாங்கள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.