பலதார திருமணம்: “எனக்கு பல காதலர்களும் துணைவர்களும் தேவைப்படுவது ஏன்?”

தனது இளம் பருவத்தில் இருந்தே மூவும்பி நெட்சலாமா ஒரே நபரை திருமணம் செய்து வாழும் பழக்கத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒன்றாக இருப்பீர்களா என்று எப்போதும் தன்னுடைய பெற்றோரிடம் கேட்டுக் கொண்டே வளர்ந்தார் மூவும்பி. இது குறித்து பிபிசியிடம் பேசிய மூவும்பி, “நம் வாழ்வில் இடம்பெறும் மக்கள், பருவங்களைப் போல மாற வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ள உலகில், உறவு பற்றிய பேச்சு எல்லா இடங்களிலும் கற்பிக்கப்பட்டது, சினிமாவிலும் தேவாலயத்திலும் ஒரே விஷயம் சொல்லப்பட்டது. ஆனால் என்னால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.”

இப்போது மூவும்பிக்கு 33 வயதாகிறது. இவரது அடையாளம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் உறவு வைத்திருப்பது மற்றும் எந்த உறவிலும் எந்தப் பிணைப்பையும் ஏற்படுத்திக்கொள்ளாதது. இதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவில் தன்னைப் போன்ற சிந்தனை கொண்டவர்களின் நலன்களை பாதுகாக்க அவர்களுக்காக குரல் கொடுப்பதை ஒரு இயக்கமாக மூவும்பி நடத்தி வருகிறார்.

இது பற்றி அவர் பிபிசியிடம் பேசியபோது, “எனக்கு தற்போது ஒரு முக்கிய கூட்டாளி இருக்கிறார், எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். மற்ற கூட்டாளிகள் எங்கள் அனைவருடன் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், எனது முக்கிய கூட்டாளி என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, “எதிர்காலத்தில் நான் செய்து கொள்ள விரும்பும் திருமணம் இதுபோன்றதாக இருக்கலாம். இது ஒரு கற்பனைதான். நான் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள நேரலாம். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் நான் மக்களை ஈர்க்கிறேன்.”

Previous post தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் – உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி
Next post சினேகா தூபே Vs சைமா சலீம்: காஷ்மீர் விவகாரத்தில் தாய்நாட்டுக்காக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் பெண்கள் – sigappanada.com