‘சாதனைனா இப்படி இருக்கணும்’…ரிஷப் தரமான ரெக்கார்ட்: பகலிரவு டெஸ்டில் ஷ்ரேயஸ் சரித்திரம்!

ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

இந்தியா, இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டி பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்திய இன்னிங்ஸ்:

இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 252/10 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததால் ஷ்ரேயஸ் ஐயரை (92) தவிர யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

இலங்கை இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இலங்கை அணி 109/10 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பும்ரா 5/24 விக்கெட்களை கைப்பற்றி, இலங்கைக்கு எதிரான டெஸ்டில், சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்தியா, 2ஆவது இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து 141 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணியில் முதல் வரிசை வீரர்கள் ரோஹித் ஷர்மா (46), ஹனுமா விஹாரி (35) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 13 ரன்களை மட்டும் அடித்து, ஜெயவிக்ரமா பந்துவீச்சில் LBW ஆனார்.

Previous post குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை – யார் இவர்?
Next post Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது – 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து!