கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் – ஐ.சி.எம்.ஆர்

கொரோனா வைரஸின் இரண்டம் அலை இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் தளர்வாக, 2019ஆம் ஆண்டில் நாம் நடமாடியதைப் போல வெளியே சுற்றித் திரிய முடியாது. இப்போதும் கொரோனா நமக்கு மத்தியில் தான் இருக்கிறது.

இப்போது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தன் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் என அது கூறியுள்ளது.

இதில் ஒரே ஒறு ஆறுதல் என்னவென்றால், இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது எனக் கூறியுள்ளது ஐ.சி.எம்.ஆர். “ஒவ்வொரு மாநிலமும் தங்களது கொரோனா பாதிப்பு குறித்து தங்களிடம் இருக்கும் தரவுகளை ஆராய்ந்து, மாநிலம் கொரோனாவின் எந்த நிலையில் இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்” என ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

Previous post மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இறப்புகளை 95% குறைத்து சாதித்த பிரேசில் நகரம் – sigappanada.com
Next post வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை: இலங்கையில் திட்டம்