கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார்.

இந்த ஆன்டிபாடி மருந்து உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஆன்டிபாடி மருந்து தற்போது காப்புரிமை பெறும் நடைமுறையில் உள்ளது. காப்புரிமை பெற்றவுடன் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.

செவ்வாயன்று இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டிவிட்டர் பக்கத்தில் மூன்று ட்வீட்கள் பதிவு செய்திருந்தார்.

கடந்த இரண்டு நாட்களில் ஐஐபிஆர்(இஸ்ரேல் இன்ஸ்டியூட் ஃபார் பயோலாஜிகல் ரிசர்ச்) வெற்றிகரமாக கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி ஒன்றை கண்டறிந்துள்ளது என முதல் டிவிட்டரில் பதிவிட்டார்.

இரண்டாவது பதிவில் அந்த ஆன்டிபாடியில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பதிவிடப்பட்டிருந்தது.

1. மொனோக்ளோனல் ஆன்டிபாடியாக இருக்க வேண்டும், புதியது மற்றும் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்; ஆபத்தான ப்ரோடீன்கள் குறைவாக இருக்க வேண்டும்.

2. இந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்ய வேண்டும்.

3. இந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸின் மேல் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள அறிவியல் வெளியீட்டுகளைப் பார்க்கும் போது ஐஐபிஆர் தயாரித்த இந்த ஆன்டிபாடியில், மேல் கூறப்பட்டுள்ள அனைத்து தகுதியும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என மூன்றாவது ட்வீட்டில் பதிவிடப்பட்டிருந்தது.

மொனாக்ளோனல் ஆன்டிபாடி என்றால் என்ன?

அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கூற்றுப்படி மொனொக்ளோனல் ஆன்டிபாடி என்பது ஒரு வகையான ஊட்டச்சத்து அதாவது ப்ரோடீன் ஆகும். இது ஆய்வகத்தில் தயாரிக்கப்படும். நோயாளிகளின் உடலில் நோய்க்காரணிகளாக இருக்கும் பிறபொருட்கள் மீது இது ஒட்டிக்கொள்ளும்.

மொனொக்ளோனல் ஆன்டிபாடி பலவகைப்படும். இதுவரை பல வகையான புற்றுநோய் சிகிச்சையில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

Next post சச்சினுக்கே இடமில்லை… ஆனா ஒரே ஒரு இந்தியருக்கு இடம்: உலகக்கோப்பை லெவனை வெளியிட்ட அப்ரிதி!