
மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இறப்புகளை 95% குறைத்து சாதித்த பிரேசில் நகரம் – sigappanada.com
பிரேசிலிலுள்ள நகரம் ஒன்றில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அங்கு பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு 95 சதவீதம் குறைந்துள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சுமார் 45,000 மக்கள் வாழும் பிரேசிலின் செஹானா நகரில் 18 வயதிற்கு மேற்பட்ட கிட்டத்தட்ட அனைவருக்கும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவாக் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிலரும் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக ஆய்வு முடிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களில் 75 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவுக்கு பிறகு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது, அங்கு இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் சுமார் 4,63,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த நாட்டின் தேவையை விட தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதல் மிகவும் குறைவாக உள்ள நிலையில், நோய்த்தொற்று பரவலும், உயிரிழப்பும் தொடர்ந்து உச்சபட்ச நிலையிலேயே இருக்கின்றன. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுதழுவிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு முன்வைக்கப்படுகிறது.
More Stories
இத்தாலி: பதினாறாம் பெனடிக்ட் தனிப்பட்ட செயலாளரின் வெளிப்பாடுகள் பெரும் சத்தத்தை ஏற்படுத்துகின்றன
பதினாறாம் பெனடிக்ட்டின் தனிச் செயலாளரான மான்சிக்னார் ஜார்ஜ் கான்ஸ்வீன், வத்திக்கானில் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி வரும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஜனவரி 13 வெள்ளியன்று 8 மணி செய்திகளுக்காக...
hair growth : முடி கொட்றது நின்னு.. வளர ஆரம்பிக்க இந்த 4 இயற்கை பொருள் போதும். இப்படிதான் யூஸ் பண்ணனும்!
கூந்தல் மெலிந்து சிக்குபடிந்து இருந்தால் அதை நீங்கள் வெறுக்க செய்யாதீர்கள். சற்று கவனம் எடுத்தால் கூந்தல் இழந்த ஆரோக்கியத்தை கூந்தல் மெலிந்து இருக்க பல காரணங்கள் இருக்கலாம்....
Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது – 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து!
2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது (மேலும்…)
கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் – ஐ.சி.எம்.ஆர்
கொரோனா வைரஸின் இரண்டம் அலை இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் தளர்வாக, 2019ஆம் ஆண்டில் நாம் நடமாடியதைப் போல வெளியே சுற்றித் திரிய முடியாது....
`கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா?’ – பிரதமரை சாடிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்
கொரோனா பேரிடரை இந்திய அரசு எதிர்கொள்ளும்விதம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். `முன்கூட்டியே திட்டமிடல் என்பதை உங்களிடம் பார்க்க முடியவில்லை' எனவும்...
ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என...