
கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் – ஐ.சி.எம்.ஆர்
கொரோனா வைரஸின் இரண்டம் அலை இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் தளர்வாக, 2019ஆம் ஆண்டில் நாம் நடமாடியதைப் போல வெளியே சுற்றித் திரிய முடியாது. இப்போதும் கொரோனா நமக்கு மத்தியில் தான் இருக்கிறது.
இப்போது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தன் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் என அது கூறியுள்ளது.
இதில் ஒரே ஒறு ஆறுதல் என்னவென்றால், இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது எனக் கூறியுள்ளது ஐ.சி.எம்.ஆர். “ஒவ்வொரு மாநிலமும் தங்களது கொரோனா பாதிப்பு குறித்து தங்களிடம் இருக்கும் தரவுகளை ஆராய்ந்து, மாநிலம் கொரோனாவின் எந்த நிலையில் இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்” என ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
More Stories
Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது – 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து!
2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது (மேலும்…)
மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இறப்புகளை 95% குறைத்து சாதித்த பிரேசில் நகரம் – sigappanada.com
பிரேசிலிலுள்ள நகரம் ஒன்றில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அங்கு பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு 95 சதவீதம் குறைந்துள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த...
`கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா?’ – பிரதமரை சாடிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்
கொரோனா பேரிடரை இந்திய அரசு எதிர்கொள்ளும்விதம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். `முன்கூட்டியே திட்டமிடல் என்பதை உங்களிடம் பார்க்க முடியவில்லை' எனவும்...
ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என...
அமெரிக்கா: டாலரின் அதிகாரம் வீழ்கிறதா? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்
அமெரிக்க நாணய மதிப்பான டாலர், "உலகளாவிய நாணயம்" என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ - சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும்...
கொரோனா ஊரடங்கு: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் மோதி பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (மேலும்…)