சினிமா
Now Reading
5 மில்லியன் பார்வையாளர்கள் – ‘பைரவா’ டிரைலருக்காம்…..
0

5 மில்லியன் பார்வையாளர்கள் – ‘பைரவா’ டிரைலருக்காம்…..

by editor sigappunadaJanuary 3, 2017 3:26 pm

புத்தாண்டை முன்னிட்டு இணையத்தில் வெளியிடப்பட்ட ‘பைரவா’ ட்ரெய்லர், 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாவு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைரவா’. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தணிக்கை செய்யப்பட்டு, ஜனவரி 12ம் தேதி வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ‘பைரவா’ ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 12 மணி நேரத்தில் சுமார் ஒன்றரை மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தற்போது 5 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கும் ‘பைரவா’ ட்ரெய்லர், பொங்கல் பண்டிகைக்குள் 10 மில்லியன் பார்வைகளை கடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

மேலும், விஜய் படங்களின் வியாபாரத்தில் ‘பைரவா’ ஒரு மைல்கல்லைத் தொட்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். சுமார் 50 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது. இப்பணத்தை எடுக்க ‘பைரவா’ சுமார் 75 கோடி அளவுக்கு வசூல் செய்ய வேண்டும். இதனால் பெருவாரியான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response