அரசியல்
Now Reading
“45 திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆதரவு” ராஜேந்திர பாலாஜி காமெடி
0

“45 திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆதரவு” ராஜேந்திர பாலாஜி காமெடி

by Sub EditorMarch 4, 2017 2:49 pm

தமிழக சட்டசபையில் கடந்த 18-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்காததால் சட்டசபை கடும் அமளிக்குள்ளானது. மேஜை உடைப்பு, மைக் உடைப்பு, சட்டை கிழிப்பு என சட்டசபை சண்டைக்களமானது. இதனையடுத்து சபாநாயகர் திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்றிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது, அவரது அரசு கவிழ்ந்திருக்கும் என திமுக, ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் கூறினர். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக சசிகலா தரப்பைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசும்போது, “ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் 45 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக வந்திருந்தனர். இது ஸ்டாலினுக்கு கூட தெரியாது. ரகசிய வாக்கொடுப்பு நடத்தியிருந்தால் அத்தோடு திமுக காணாமல் போய்இருக்கும். நல்லவேளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தவில்லை என்று ஸ்டாலின் சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டும்” என்று பேசினார். கூட்டத்திலிருந்த சிலர், ‘இது என்ன காமெடி பண்ணுகிறார் ராஜேந்திர பாலாஜி’ என்று பேசிக் கொண்டனர்.

– ஓவியா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response