உலகம்
Now Reading
3G, 4 G,இப்போ 5 G க்கு போய்டாங்க
0

3G, 4 G,இப்போ 5 G க்கு போய்டாங்க

by editor sigappunadaJanuary 9, 2017 5:08 pm

Qualcomm நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு Processor தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன்வரிசையில் இந்தாண்டின் தொடக்கத்திலே தனது Snapdragon Processor சீரிஸில் 835 Processorஐ அறிமுகப்படுத்தியது. இந்த புராசஸரால் 5 நிமிடம் சார்ஜ் செய்தால் ஸ்மார்ட்போன் 5 மணிநேரத்துக்கு சார்ஜ் நிற்க்கும் தன்மையுடன் தயாரித்திருந்தது Qualcomm. புதுமைகளை கையாண்டு வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற எலக்ட்ரானிக் சன்ஸ்யூமர் கண்காட்சியில் 5G தொழில்நுட்பம் குறித்து பேசியது.

இந்த நிகழ்ச்சியில் புது புராசஸரான Snapdragon 835, அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்த செயளாலர் ஸ்டீவ் மெல்லோன், 5G நெட்வொர்க் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கூடிய விரைவிலே வந்துவிடும் என்று கூடினார். அதற்காக மிக அதிகமான பணத்தை இன்வெஸ்ட் செய்ய இருக்கின்றோம். அதற்கான முதல்படி எடுத்து வைத்துவிட்டோம். 5G நெட்வொர்க் மூலம் 1GB-க்கான ஃபைலை வெறும் 3 வினாடிகளில் பதிவிறக்கம் செய்துவிடலாம். மேலும், 4K தொழில்நுட்பம் கொண்ட வீடியோவை 18 வினாடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் கூறியிருக்கிறார்.

இண்டெர்நெட் தனது வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை அடந்துகொண்டிருக்கிறது. 2G நெட்வொர்கை ஆச்சரியத்துடன் பார்த்த, 3G 4G என பலகிக் கொண்டனர். மக்களுக்கு வேகமான நெட்வொர்க் தான் தேவைப்படுகின்றது. ஸ்மார்ட்போன்களும் 4G, அதிக சக்தி கொண்ட பேட்டரி, புராசஸர் என தன்னை தான் வருகின்றன. Snapdragon 835 Processor வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன்களுக்கு வேகம் கொடுப்பது என 5G நெட்வொர்க்கின் முதல்படியாக அமைந்திருக்கிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response