மாவட்டம்
Now Reading
34,000 சதுர மீட்டருக்கு பரவிய கச்சா எண்ணெய்
0

34,000 சதுர மீட்டருக்கு பரவிய கச்சா எண்ணெய்

by editor sigappunadaFebruary 3, 2017 2:23 pm

சென்னையில் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில், வெளியான கச்சா எண்ணெய் கடலில் 34,000 சதுர மீட்டர் வரை பரவியுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது. எண்ணெய் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இதில், எர்ணாவூர் கடலோரப் பகுதியில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது.

இதனால் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் கசிவை நீக்க துரித நடவடிக்கையில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு கடலோர காவல்படை அதிகாரி ராஜன் பர்கோத்ரா கூறும்போது, “கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அளவை எங்களால் அளவிட முடியவில்லை. இதனை கப்பலின் உரிமையாளர்தான் கூற வேண்டும். இது அவர்களின் கடமை.

கச்சா எண்ணெய் கடலில் 34,000 சதுர மீட்டர் வரை பரவியுள்ளது. கடலில் கலந்துள்ள கழிவை சுத்தம் செய்ய நாங்கள் எந்த வேதியியல் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. ஒரு மாசை நீக்க மற்றொரு மாசுகேட்டை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமே எண்ணெய் நீக்கப்பட்டு வருகிறது.

ஒரு முறை கச்சா எண்ணெய் கடலின் மிகப் பெரிய பரப்பளவில் கலந்துவிட்டால் அதனை நீக்குவது கடினம்” என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response