மாவட்டம்
Now Reading
24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படும் டாஸ்மாக்-பெண்கள் போராட்டம்
0

24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படும் டாஸ்மாக்-பெண்கள் போராட்டம்

by editor sigappunadaJanuary 9, 2017 8:12 pm

 

24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அப்பகுதி பெண்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை உருவாகும் என்று கூறப்பட்டது. அதன்படி அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதலில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாகவும், பின் மதுக்கடை நேரம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலான இடங்களில் மதுக்கடைகள் குறித்த நேரத்தில் மூடப்படுவதில்லை. 24 மணி நேரமும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில் கோல்டன் நகரில் உள்ள பாருடன் இணைந்திருக்கும் மதுக்கடை பாருடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாகக் கூறி, அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதுக்கடைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response