மாவட்டம்
Now Reading
2 வயது சிறுவனை கொலை செய்து ஏரியில் வீசிய தாய்
0

2 வயது சிறுவனை கொலை செய்து ஏரியில் வீசிய தாய்

by editor sigappunadaJanuary 5, 2017 8:10 pm

காட்பாடி ரெயில்வே போலீசார் நேற்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது பிளாட்பாரத்தில் 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுத்து கிடந்தார்.

சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது குடும்ப தகராறு காரணமாக தனது 2 வயது மகனுடன் காட்பாடிக்கு வந்ததும், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தனது குழந்தையுடன் தற்கொலை செய்ய முடிவு செய்து அருகில் உள்ள ஏரிக்கு சென்று குழந்தையை மட்டும் ஏரியில் வீசி கொலை செய்துவிட்டு வந்தது தெரியவந்தது.

இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடனடியாக காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும் போலீசாருடன் சிறுவனின் உடல் வீசப்பட்ட ஏரிக்கு விரைந்து சென்றனர். இரவு 10 மணி அளவில் சிறுவனின் உடலை கயிறு கட்டி மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிறுவனின் பிணத்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காட்பாடி போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தபெண் பெங்களூருவை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி சியாமளா என்பதும் குடும்ப தகராறு காரணமாக காட்பாடிக்கு வந்து தற்கொலை செய்ய முடிவு செய்து தனது மகனை ஏரியில் வீசியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்