மாவட்டம்
Now Reading
ஹைட்ரோ கார்பன் திடீர் கசிவு -அச்சத்தில் மக்கள்
0

ஹைட்ரோ கார்பன் திடீர் கசிவு -அச்சத்தில் மக்கள்

by editor sigappunadaMarch 7, 2017 12:05 pm

ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் ஆய்வுக்குழாய் கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் போராட்டம் நடைபெறாமல் தடுக்க ஆய்வுக்குழாய் அருகே போலீசார் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பே மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பூமிக்கடியில் பெட்ரோல் இருக்கிறதா என்று ஆய்வு செய்வதற்காக விவசாயிகளின் நிலங்களை குத்தகை பேசி, கையகப்படுத்தி ஆழ்துளை கிணறு அமைத்தனர். இதன் மூலம் மீத்தேன், ஷேல் கேஸ் போன்றவை எடுக்கபோவது விவசாயிகளுக்கு தெரிய வந்தது. இதனால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இந்த பகுதி விவசாயிகள் அவ்வப்போது தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள மீத்தேன் திட்ட சோதனைக்குழாயில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் வாயு கசிவை சரி செய்தனர். இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை நெடுவாசலில் பொதுமக்கள் நடத்தி வரும் நிலையில், வாயுக் கசிவு எதிரொலியால் ஜெயங்கொண்டம் பகுதியிலும் போராட்டம் நடைபெறலாம் என்ற நிலையில் ஆழ்குழாய் கிணறு அருகே அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response