பேட்டி
Now Reading
ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார்- தமிழிசை குற்றச்சாட்டு
0

ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார்- தமிழிசை குற்றச்சாட்டு

by editor sigappunadaApril 5, 2017 12:04 pm

இந்தி பிரச்னையில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “கல்வியாக இருந்தாலும் கல்லாக இருந்தாலும் இந்தியைத் திணிக்கக் கூடாது என்கிற அக்கறை எங்களுக்கு எப்போதுமே உண்டு. இந்தி விஷயத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். விவசாயிகள் நலனுக்காகத்தான் மத்திய அரசு பயிர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தில் தமிழகத்திலிருந்து 50 லட்சம் பேர் வரை பதிவு செய்து பயன்பெற முடியும். ஆனால், வெறும் 13,000 விவசாயிகள் மட்டுமே இதுவரை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாமலேயே மத்திய அரசை குறை கூறுவது நியாயம் இல்லை” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, ‘நெடுஞ்சாலை மைல் கல்லில் இந்தியில் எழுதுவதற்குக் காரணம் திமுக-தான்’ என பாஜக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response