சினிமா
Now Reading
வேலைக்காரன் போஸ்டர் சுட்டதா? கலாய்கும் ரசிகர்கள்
0

வேலைக்காரன் போஸ்டர் சுட்டதா? கலாய்கும் ரசிகர்கள்

by editor sigappunadaJune 7, 2017 11:21 am

ரசிகர்கள் பல மாதங்களாகக் காத்திருந்த ‘வேலைக்காரன்’ போஸ்டர் ரிலீஸ் வெற்றிகரமாக முடிவடைந்தது.சிவகார்த்திகேயன் ஒரு கையில் லேப்டாப் பேக்கையும் மறு கையில் அரிவாளையும் வைத்திருப்பது போல ‘வேலைக்காரன்’ போஸ்டர் வெளியிடப்பட்டது. வேலைக்காரன் போஸ்டரை பார்த்ததும் எங்கோயோ பார்த்த மாதிரி தெரிய, கூகுளில் தேடியபோது பதில் கிடைத்தது. அது சுட்ட போஸ்டர் என்பது தெரிந்து விட்டது.

இது, ‘ஃபாலிங் டவுன்’ என்ற ஹாலிவுட் பட போஸ்டரின் காப்பி என சமூக வலைதளங்களில் சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆதாரமாக அந்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஜோயல் ஷூமேக்கர் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மைக்கேல் டக்ளஸ் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் ஒரு கையில் சூட்கேஸ், மறுகையில் துப்பாக்கி வைத்திருப்பதுபோல அந்த போஸ்டர் உள்ளது. இதேபோல ‘Joe Somebody’ என்ற படத்தின் போஸ்டரில் ஹீரோ டிம் ஆலன் ஒரு கையில் சூட்கேஸும் மறுகையில் பாக்சிங் கையுறையும் அணிந்திருப்பார். அதையும் ஒப்பிட்டு ‘வேலைக்காரனை’ கலாய்த்துள்ளனர் ரசிகர்கள்.

மோகன் ராஜா இயக்கும் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில், சினேகா உட்பட பலர் நடிக்கும் ‘வேலைக்காரன்’ இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். மலேசியா மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response