மாவட்டம்
Now Reading
வேலூரில் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் கொலை
0

வேலூரில் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் கொலை

by editor sigappunadaMarch 8, 2017 10:54 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சசிகுமார் (வயது 25), பெங்களூருவில் கட்டிடவேலை செய்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

அவர் நேற்று இரவு ராமாபுரம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை மற்றவர்கள் பார்த்துள்ளனர்.

பின்னர் அங்குள்ள பொதுகழிப்பிடத்தின் அருகில் உள்ள மரத்தடியில் சசிகுமார் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கிடந்ததை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் பதற்றம் அடைந்த சசிகுமாரின் பெற்றோர் விரைந்து சென்று அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர்.

ஆனால் சசிகுமார் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். அவர் துப்பாக்கிகுண்டு பாய்ந்து இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response