உலகம்
Now Reading
வேன் மீது லாரி மோதி விபத்து – 25 பேர் பலி!
0

வேன் மீது லாரி மோதி விபத்து – 25 பேர் பலி!

by Sub EditorJanuary 3, 2017 11:44 am

கிழக்கு தாய்லாந்தில் கிளெங் மாவட்டத்தில் உள்ள ரயாங் என்ற இடத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

சாங்புரி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு வேன் மீது பயங்கரமாக மோதிக் கொண்டது. இதனால் லாரியும், வேனும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 11 பேரும், வேனில் சென்ற 14 பேரும் ஆகமொத்தம் 25 பேர் உடல் கருகி பலியாகினர். அவர்களில் 3 வயது சிறுவனும் அடங்குவான்.

அதிவேகமாக வந்த வேன் குறுக்கு ரோட்டை கடந்த போது தனது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response