உலகம்
Now Reading
வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
0

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

by editor sigappunadaMarch 20, 2017 12:34 pm

அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் வழியில் உள்ள செக் போஸ்டுக்கு நேற்று காரில் வந்த நபர் ஒருவர் தனது காரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, செக்போஸ்ட் மூடப்பட்டது.

அந்த காரை போலீஸார் தீவிர சோதனை செய்த பின்னர் அந்த நபரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். காரில் வெடிகுண்டு இருந்ததா, இல்லையா என்பது பற்றி அதிகாரபூர்வ தகவலை வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு கருதி தெரிவிக்கவில்லை. தொடர்ந்து செக்போஸ்ட் மூடப்பட்டது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response