மாவட்டம்
Now Reading
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
0

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

by editor sigappunadaJanuary 1, 2017 11:38 am

கடந்த ஆண்டு நவம்பர்-8 ஆம் தேதி பிரதமர் மோடி பழைய 500 மட்டும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு டிசம்பர்-30 தேதி வரை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர்-30 தேதி வரை மாற்றமுடியாதவர்கள் மார்ச்31, 2017 வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் வைத்திருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது: ’பெமா’ எனப்படும் வெளிநாட்டு பணப்பரிமாற்ற மேலாண்மை சட்டத்திற்கு உட்பட்டு, குறிப்பிட்ட அளவிலான பணத்தை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை வெளிநாடு சென்றிருந்த இந்தியர்கள், தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச்-31,2017 தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30,2017 வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியில் பணம் மாற்றுவதற்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் சரி பார்க்கப்படும் என்றும் இதில் பொய் கூறினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response