மாவட்டம்
Now Reading
விவசாயிகள் வளையல் உடைத்து, பொட்டழித்து போராட்டம் !
0

விவசாயிகள் வளையல் உடைத்து, பொட்டழித்து போராட்டம் !

by editor sigappunadaApril 17, 2017 11:53 am

தமிழக விவசாயிகள் கடந்த 34 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.

கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் இன்று 34-வது நாளாக நீடிக்கிறது. எலிக்கறி, பாம் புக்கறி தின்று போராட்டம், மொட்டை அடித்து, மண் சோறு சாப்பிட்டு, சேலை அணிந்து, தாலி அறுத்து போராட்டம் என தினமும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டத்தில் இன்று விவசாயிகள் தங்கள் கைகளில் அணிந்த வளையல்களை உடைத்தும், நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்தும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தினர்.

இன்றைய போராட்டம் குறித்து போராட்டக் குழுத் தலைவர் அய்யாக் கண்ணு கூறும் போது, , சேலை கட்டி, பொட்டு வைத்தும், தாலியை அறுத்தும் போராட்டம் நடத்தியும் எங்களை இதுவரை பிரதமர் சந்தித்து பேச முன் வர வில்லை. எனவே போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று பெண்களை போல் வளையல் அணிந்து அதனை உடைத்தும், குங்குமத்தை அழித்தும் போராட்டம் நடத்தியுள்ளோம். விவசாயிகளான எங்கள் மரணத்திற்கு பிறகு எங்கள் மனைவி மார்களின் கையில் அணிந்திருக்கும் வளையல்களை உடைத்து, நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அழித்து விவசாயிகளின் மனைவிகள் அனைவரும் வாழ வழியில்லாமல் நிர்கதியான நிலையை சித்தரிக்கும் வண்ணம் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. நியாயமான எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. கார்ப்ரேட் கம்பெனி முதலாளிகளை சந்திக்கும் மோடி எங்களை சந்திக்க மறுக்கிறார். அவர் இல்லத்திற்கு அருகிலேயே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி நாங்கள் என்ன தவறு செய்துவிட்டோம் என்று எங்களை சந்திக்க மறுக்கிறார் என்று தெரியவில்லை. அவர் எங்களை சந்திக்கவில்லை என்றால் தமிழக விவசாயிகள் 4000 பேர் வாழ்வை இழக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response