பேட்டி
Now Reading
விவசாயிகள் போராட்டம் டி.டி.வி தினகரன் திடீர் ஆதரவு
0

விவசாயிகள் போராட்டம் டி.டி.வி தினகரன் திடீர் ஆதரவு

by editor sigappunadaApril 4, 2017 12:58 pm

அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்துக்கு அதிமுக (அம்மா) சார்பில் உளப்பூர்வமான, தார்மீக ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயங்கள் அடிப்படையில் இந்த ஆதரவினை அதிமுக (அம்மா) அளிக்கிறது. இயற்கைப் பேரிடர்களையும், பருவநிலை மாற்றங்களினாலும், நீதிமன்ற ஆணைகளின்படி நடந்து கொள்ள மறுக்கும் சில மாநிலங்களின் குறுகிய சிந்தனைகளாலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுவரும் இன்னல்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனில் அதற்கு தேசிய அளவிலான உறுதியான செயல் திட்டம் தான் ஒரே தீர்வு. அத்தகைய தீர்வை வேண்டி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கும், அதனை ஆதரித்து அமைதி வழியில் நடைபெறும் அறப்போராட்டங்களுக்கும் அதிமுக (அம்மா) எப்பொழுதும் துணை நிற்கும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response