ஸ்பெஷல்
Now Reading
விவசாயிகள் கடன் தள்ளுபடி நீதிமன்றம் உத்தரவு
0

விவசாயிகள் கடன் தள்ளுபடி நீதிமன்றம் உத்தரவு

by editor sigappunadaApril 5, 2017 9:37 am

விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

“ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள் கடன் தள்ளுபடியால் ஏற்படும் ரூபாய் 1,980 கோடி நிதி சுமையை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும்.

மத்திய அரசிடம் தேவையான நிதி உதவியைக் கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடனை செலுத்தாத விவசாயிகள் மீது வங்கிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

இதற்குமுன் ஐந்து ஏக்கருக்குக்கீழ் நிலம் வைத்திருந்தவர்களுக்கு மட்டும் தமிழக அரசு கடன் தள்ளுபடி செய்தது. ஆனால், இந்த உத்தரவில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு மௌனமாக இருக்கக் கூடாது. தானாக முன்வந்து மாநில அரசுக்கு உதவி செய்ய வேண்டும்” என நீதிபதிகள் கூறினர்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response