மாவட்டம்
Now Reading
விழுப்புரத்தில் லாரி மோதி 6-ம் வகுப்பு மாணவி பலி
0

விழுப்புரத்தில் லாரி மோதி 6-ம் வகுப்பு மாணவி பலி

by editor sigappunadaJanuary 10, 2017 5:06 pm

விழுப்புரம் பூந்தோட்டம் நடேசன் நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 42). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவரது மகள் காயத்ரி(12). விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தனியார் ஆங்கிலப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 8 மணிக்கு காயத்ரி வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டார்.

காயத்ரியை அவரது தந்தை ராஜா மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து வந்தார். விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இதில் ராஜாவும், காயத்ரியும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி காயத்ரி தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். விபத்தில் ராஜா லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தன் கண் முன் மகள் பலியானதை பார்த்து அவர் கண்ணீர் விட்டு கதறினார்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாணவி உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருச்செங்கோடு சின்னகவுன்டர்பாளையம் மேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்று தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response