மாவட்டம்
Now Reading
விமான நிலையத்தில் சிக்கிய ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!!
0

விமான நிலையத்தில் சிக்கிய ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!!

by Sub EditorFebruary 4, 2017 11:25 am

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று மலேசியாவில் இருந்து சென்னை வழியாக வந்து சென்றது.

அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஜலாலுதீன் ஆகிய 2பேரிடமும் சோதனை நடத்திய போது அவர்களிடம் 540 கிராம் கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.

மேலும் விமானத்தில் சோதனையிட்டபோது அதில் 700 கிராம் தங்கம் இருக்கைக்கு அடியில் கிடந்தது. சோதனைக்கு பயந்து இருவருமே அதனை விமான இருக்கையின் அடியில் போட்டு விட்டு வந்தது தெரியவந்துள்ளது. மொத்தம் ரூ.36 லட்சம் லட்சம் மதிலான 1.24 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் முகமது சுல்தான், ஜலாலுதீன் ஆகிய இருவரையும் சென்னை அழைத்து சென்று போலீசார் அவர்களை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response