மாவட்டம்
Now Reading
விடுமுறை பட்டியலில் பொங்கல் மீண்டும் சேர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
0

விடுமுறை பட்டியலில் பொங்கல் மீண்டும் சேர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

by editor sigappunadaJanuary 10, 2017 8:01 pm

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாளை மத்திய அரசு மீண்டும் சேர்த்துள்ளதற்கு திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-  தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து பொங்கலைக் கட்டாய விடுமுறை பட்டியலில் மத்திய அரசு இப்போது மீண்டும் சேர்த்திருக்கிறது. இதனை வரவேற்கிறேன். திமுகவின் போராட்ட அறிவிப்புக்குக் கிடைத்த வெற்றி.

அதேசமயம், தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது நல்லதல்ல என்பதையும் மத்திய பாஜக அரசு உணர வேண்டும்.  பொங்கல் நாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய அதிகாரி மீதும், அந்த அதிகாரிக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் துறை ரீதியாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கலை மீண்டும் சேர்க்கக் கோரி திமுக சார்பில் புதன்கிழமை (ஜன.11) நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response