மாவட்டம்
Now Reading
விடுதலை செய்! விடுதலை செய்! மெரினாவில் தொடரும் கோஷம்
0

விடுதலை செய்! விடுதலை செய்! மெரினாவில் தொடரும் கோஷம்

by editor sigappunadaJanuary 24, 2017 4:03 pm

நேற்றிரவோடு மெரினாவில் போராட்டம் முடிந்துபோகும் எனப் பலரும் பேசிவந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதை ஒன்றும் செய்ய முடியாமல் காவல்துறை கடற்கரைச் சாலையில் நின்று கொண்டிருந்தது. எவ்வளவு வன்முறைகள் தங்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் நூற்றுக்கணக்கானோர் இன்னும் உறுதியோடு போராடிவருகின்றனர். திரை பிரபலங்களிலிருந்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன போதும், மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக நிற்கின்றனர். ஏற்கனவே உயர்நீதின்றம் காவல்துறையின் அத்துமீறைலைக் கண்டித்துள்ளது. அமைதி வழியில் போராடுபவர்கள்மீது தடியடி நடத்தக்கூடாது என ஆணையும் பிறப்பித்துள்ளது.

மீனவர் சங்கத் தலைவர் மணி மீனவர்களிடம் பேசி அவர்களைப் போராட்டத்தில் இருந்து விலகி வருமாறு கூறினார். “காவல்துறையுடன் உள்ள பிரச்சனைகளை நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம். இப்போது வாருங்கள்” எனப் பேசினார். மீனவர் சங்கத் தலைவர் என்பதால் அவரது பேச்சைக் கேட்டு ஒரு 20 மீனவர்கள் மட்டும் கலைந்து சென்றனர்.

ஆனால் இங்குள்ள மாணவர்களும் அவர்களை விட அதிக எண்ணிக்கையில் இருந்த பெண்களும் உறுதியாய் நின்றிருக்க அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டோம். இந்த அவசரச் சட்டமே நிரந்தரச் சட்டத்திற்கு நிகர் தான் என ஒரு வாதம் எழுந்துள்ளது. அது அப்படியே இருந்தாலும், காவல்துறை அமைதி வழிப் போராட்டக்காரர்கள் மீது ஏன் தடியடி நடத்தியது? அந்த தடியடிக்கு மன்னிப்புக் கோர வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விடுவிக்கவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இரண்டு மாணவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை ஒப்படைக்க வேண்டும். நேற்று நகரில் நடந்த வன்முறைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். என தெளிவாகக் கூறினர்.

அதனால் கலைந்து போக முடியாது என்று மறுத்துவிட்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response