பேட்டி
Now Reading
வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்
0

வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்

by editor sigappunadaJanuary 29, 2017 11:01 am

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவதாக தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதல் அளித்திருந்ததன் அடிப்படையில் தமிழகத்திற்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தடுப்பூசி குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response