மாவட்டம்
Now Reading
வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகுமா?
0

வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகுமா?

by editor sigappunadaJanuary 3, 2017 12:19 pm

தமிழகத்தில் 5 கோடியே 93 லட்சம் வாக்காளர்களுடன் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுவதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டு, அந்த மாதம் 30-ந் தேதி வரை 18 லட்சத்துக்கும் மேற்பட்ட திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதனையடுத்து, விண்ணப்பங்களின் உண்மை தன்மை அறிவதற்கான கள ஆய்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் தகுதியுள்ள புதிதாக 15 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, 5 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் ஐந்தாம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிடுகிறார்.
இதனிடையே, தற்போது, முதன் முதலாக வாக்காளராக தகுதி பெறுவோருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக தரப்படும் என்று தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response