சினிமா
Now Reading
வறுமையில் வாடும் நடிகைக்கு நடிகர் விஷால் உதவி
0

வறுமையில் வாடும் நடிகைக்கு நடிகர் விஷால் உதவி

by editor sigappunadaApril 17, 2017 12:05 pm

பழம்பெரும் சினிமா நடிகை ஜமுனா. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சிவகுமார் ஆகியோருடன் நடித்து இருக்கிறார். பின்னணி நடன கலைஞராகவும் ஏராளமான தமிழ் படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். நடிகைகள் சரோஜா தேவி, பானுமதி ஆகியோருடனும் நடனம் ஆடி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஜமுனா வடபழனியில் உள்ள சாலையில் கையேந்தி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்.

இது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது. அதில் நான் சினிமாவில் பல உயரங்களை அடைந்தேன். பிரபல நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் இன்று வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன் என்று பேசி இருந்தார். இதை பார்த்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் உடனடியாக தனது உதவியாளர்களை அனுப்பி ஜமுனாவுக்கு உதவிகள் செய்தார்.
ஜமுனாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவர் முதியோர் இல்லத்துக்கு செல்ல விரும்பவில்லை என்றும், தனக்கு உதவி தொகை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து ஜமுனாவுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்குவதாக விஷால் வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response