மாவட்டம்
Now Reading
வறட்சி அறிக்கை தாக்கல் செய்தாச்சு -இனி நிவாரணம் தான்
0

வறட்சி அறிக்கை தாக்கல் செய்தாச்சு -இனி நிவாரணம் தான்

by editor sigappunadaJanuary 10, 2017 3:26 pm

தமிழகம் முழுவதும் போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள வறட்சி நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து தரும்படி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் சென்று வறட்சி பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அமைச்சர்களுடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த் துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர். தண்ணீரின்றி கருகிய பயிர்களை பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட்டனர்.

கடந்த 5-ந்தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் அறிக்கை மாவட்ட வாரியாக தமிழக அரசுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரது பார்வைக்கு ஆய்வறிக்கை இன்று வைக்கப்பட்டது.

அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எவ்வளவு என்பது கணிக்கப்பட்டிருந்தது.

வறட்சி நிவாரணத்துக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது ஆய்வறிக்கையை வைத்து மீண்டும் நிதி உதவி கோரப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response