மாவட்டம்
Now Reading
வருகிறது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய கார்
0

வருகிறது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய கார்

by editor sigappunadaJanuary 9, 2017 8:16 pm

இனி ஒவ்வொரு ஆண்டும் நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய காரை வெளியிட ரினால்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து ரினால்ட் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சுமித் சாஹ்னி கூறுகையில், ‘இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு புதிய காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். வருகிற 2021ஆம் ஆண்டு வரை இந்த செயல் திட்டத்தை தொடர உள்ளோம். தற்போது, இந்தியாவில் டஸ்டர் மற்றும் கிவிட் உள்ளிட்ட ஐந்து மாடல்களில் கார் விற்பனையை மேற்கொண்டுள்ளோம்.

ரினால்ட் நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சிக்கு இந்திய சந்தை மிக முக்கியமானதாகும். இந்தியாவில் ஐரோப்பிய பிராண்டுகள் கார் விற்பனையில் ரினால்ட் முதலிடத்தில் உள்ளது. எனவே, அதனை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஜி.எஸ்.டி. அமலாக்கம் குறித்த முடிவுகள் இந்தியாவின் மோட்டார் வாகன துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்’ என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத கால அளவில் ரினால்ட் நிறுவனம் 91,702 கார்களை விற்பனை செய்தது. கடந்த 2015-16 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 185.22 சதவிகித வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response