ஸ்பெஷல்
Now Reading
வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல; சமூக விரோதிகள்! – கமிஷனர் ஜார்ஜ் பேட்டி
0

வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல; சமூக விரோதிகள்! – கமிஷனர் ஜார்ஜ் பேட்டி

by Sub EditorJanuary 23, 2017 11:00 pm

சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை உண்டாக்கியதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறினார். இதுகுறித்து, அவர் அளித்த கூறியபோது,

மெரினாவில் போராட்டக்காரர்களிடம் அரசு எடுத்த நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு சட்டம் குறித்தும் காவல் துறை சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டது. போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது உளவுத் துறை மூலம் தெரியவந்தது. அந்த நபர்கள் மாணவர்களையும், இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு சென்றார்கள். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேறிய பிறகு கலைந்து செல்ல அறிவுறுத்தினோம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடிய பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்றனர். சில பிரிவினர் மட்டுமே தொடர்ந்து போராடினர். வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல. சமூக விரோதிகள் தான் காவல் துறையினர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் 94 காவலர்கள் காயம் அடைந்தனர். 51 காவல் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

சமூக விரோத சம்பவத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response