உலகம்
Now Reading
வடகொரியா செலுத்திய ஏவுகணை சில விநாடிகளில் வெடித்துச் சிதறியது
0

வடகொரியா செலுத்திய ஏவுகணை சில விநாடிகளில் வெடித்துச் சிதறியது

by editor sigappunadaApril 16, 2017 12:33 pm

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை படுதோல்வியில் முடிந்தது. செலுத்திய சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது.

வடகொரியா நாட்டை நிறுவிய கிம் இல் சுங் என்பவரின் 105-வது பிறந்ததினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது ஏகப்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட வடகொரிய ராணுவ பலத்தை நிரூபிக்கும் விதமாக காட்சி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை தென் கொரியா, “உலகை அச்சுறுத்தும் காட்சி ஊர்வலம்” என்று வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் நான் யார் என்பதைக் காட்ட வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது, ஆனால் செலுத்திய சில விநாடிகளிலேயே அது வெடித்துச் சிதறி தோல்வியில் முடிந்தது, இதனை தென் கொரிய ராணுவ அமைச்சகம் உறுதி செய்தது.

ஆனால் இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை அல்ல என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது நிலம் வழியாக தாக்குதல் நடத்தும் ஏவுகணை என்று கூறப்படுகிறது.

மீண்டும் இந்த ஏவுகணை சோதனை நடத்துவோம் என்கிறது வடகொரியா.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response