மாவட்டம்
Now Reading
வங்கிக் கிளை, ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம்
0

வங்கிக் கிளை, ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம்

by editor sigappunadaMarch 14, 2017 9:50 am

வாடிக்கையாளர்கள் வங்கிகள், ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நேற்று முதல் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் நான்கு மாதங்களாக நிலவி வந்த பணப்புழக்க பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கிலும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார்.

இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு குறைக் கப்பட்டது. அதாவது தினமும் வங்கிக் கிளைகள் மூலம் ரூ.4 ஆயிரமும் ஏடிஎம்கள் மூலம் ரூ.2,500 மட்டுமே எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் வாரத்துக்கு ரூ.24 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பின்னர் தினசரி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. மேலும் சேமிப்புக் கணக்கிலிருந்து வாரம் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று இருந்த வரம்பு பிப்ரவரி 20-ம் தேதி முதல் ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் மார்ச் 13-ம் தேதியி லிருந்து கட்டுப்பாடுகள் முற்றிலு மாக நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி கடந்த மாதமே அறிவித்திருந்தது. இதன்படி, நேற்று முதல் இந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன.

மேலும் கடந்த ஜனவரி 30-ம் தேதியே நடப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு களை ரிசர்வ் வங்கி நீக்கியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு, சேமிப்புக் கணக்கிலி ருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப் பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்ட தன் மூலம் பணமதிப்பு நீக்க நட வடிக்கை முற்றுப்பெற்று பணப் புழக்கம் பழைய நிலைக்கு திரும்பி யுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response