க்ரைம்
Now Reading
லஞ்ச போலீசால் மீண்டும் ஒரு நம்பர் லாட்டரி!
0

லஞ்ச போலீசால் மீண்டும் ஒரு நம்பர் லாட்டரி!

by Sub EditorApril 17, 2017 1:36 pm

பள்ளிபாளையத்தில் ஒரு நம்பர் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்பனை மீண்டும் தலைதூக்க தொடங்கிவிட்டது. கடும் கட்டுப்பாடுகளால் பள்ளிபாளையத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை ஒரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நம்பர் லாட்டரி மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. அதாவது ஆளும்கட்சியினரின் ஆசியோடு, போலீசாரின் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. இதை ஆளும்கட்சியினருக்கு மிக நெருக்க மானவர்கள்தான் நடத்துகின்றனர். போலீசாருக்கு எப்போதும் போல மாமூல் சென்றுவிடுவதால் எந்த தடையும் இல்லாமல் நடந்து வருகிறது. பள்ளிபாளையம் நகரம், பள்ளிபாளையம் எஸ் பி பி காலனி, தாஜ் நகர் கீழ் பகுதி, ஆவத்திப்பாளையம், அக்ரகாரம், ஆவரங்காடு, காந்திபுரம், ஓட்ட மெத்தை, வெடியரசம்பாளையம் ஆகிய பகுதியிகளில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.

உயரதிகாரிகளுக்கு ரகசிய செய்திகளை அனுப்பும் பணியில் இருக்கும் உளவு பிரிவு காவலர் ஒருவரே மாமூல் வாங்கிக்கொண்டு, ஒருநம்பர் லாட்டரி பற்றி மேலிடத்திற்கு தகவல் கொடுக்காமல் மறைத்து விடுகிறார். விசயம் வெளியில் தெரியாமல் இருக்க ஒரு புதுவித டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர். துண்டு ஒயிட் பேப்பர் சீட்டில் நம்பர்கள் எழுதி ஆன் லைன் ரிசல்ட் டை அறிவிக்கிறார்கள். அதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து அதன்படி பரிசு பட்டுவாடா கச்சிதமாக நடைபெற்று வருகிறது.
சில நிருபர்கள் பணம் பெற்றுக் கொண்டு விசயத்தை வெளியிடாமல் இருக்கிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.

– கோயில்ராஜ்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response