க்ரைம்
Now Reading
லஞ்சத்தில் மாட்டிய டி.எஸ்.பி. – பொறிவைத்துப் பிடித்த அதிகாரி!!
0

லஞ்சத்தில் மாட்டிய டி.எஸ்.பி. – பொறிவைத்துப் பிடித்த அதிகாரி!!

by Sub EditorDecember 31, 2016 12:43 pm

வேலூர் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.குமரேசன் தனக்கு சொந்தமான சுமார் 7500 சதுர அடி இடத்தை அஜய் என்பவருக்கு கொடுத்துள்ளார். அஜய், குமரேசனுக்குத் தெரியாமல் அந்த இடத்தை விற்பனை செய்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குமரேசன் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.உஸ்மான் அலிகானிடம் புகார் கொடுத்தார். 2016 ஆகஸ்ட் மாதம், அப்போதைக்கு கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து ஒருவரை மட்டும் கைது செய்தார், மற்ற நபர்களை கைது செய்யவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் டி.எஸ்.பி, பாதிக்கபட்ட குமரேசனிடம் 5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காததால் வழக்கை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டார்.

அதையடுத்து, வேறுவழி தெரியாத நிலையில், குமரேசன் விஜிலன்ஸ் அலுவலகம் சென்று, ஏ.டி.எஸ்.பி, பாலசுப்ரமணியத்திடம் முறையிட்டுள்ளார், அதை புகாராக பெற்றுக்கொண்டு, மீண்டும் டி.எஸ்.பி,யிடம் கேட்க சொல்லியிருக்கிறார். புகார்தாரர் உண்மையானவரா? அல்லது போலீஸை பழிவாங்க நினைக்கிறாரா? என்று கண்காணித்தனர்., “ கண்காணித்து விசாரித்ததில் டி.எஸ்.பி ஒரு லஞ்ச பேய், என்று தெரிந்துள்ளது. அதன் பிறகுதான், குமரேசனை விட்டு டி.எஸ்.பி,யிடம் போனில் பேரம் பேசச் சொல்லி ரெக்கார்டு செய்ய சொல்லியுள்ளார். அப்போது குமரேசன் மெல்லிய சத்தத்தில் பேசியுள்ளார்.
சார் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார், அதற்கு 5 சி தான்யா என்று கறாராக டி.எஸ்.பி, பேச, “குமரேசன் கெஞ்சுவதை பார்த்து நான்கு என குறைத்து கடைசியாக 3 லட்சம் என்று முடிவுசெய்து 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு, செல்போனை துண்டித்தார்.

அதை அப்படியே எடுத்துவந்து, ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியனிடம் கொடுக்க,மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 26ஆம் தேதியே முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின்னர், டிசம்பர் 27ஆம் தேதி ரசாயனம் தடவிய 50 ஆயிரத்தை குமரேசனிடம் கொடுத்து அனுப்பினர் . அவரைத் தொடர்ந்து பின்னால் பாலசுப்பிரமணியன் தலைமையில் விஜிலன்ஸ் டீம் மாறுவேடத்தில் சென்று காத்திருந்தது.

குமரேசன் டி.எஸ்.பி. அலுவலகம் உள்ளே போனதும், சந்தோஷத்தில், “என்னயா இவ்வளவு லேட், உனக்காகத்தான் செய்கிறேன் இல்லை என்றால் வேறு யாருக்கும் செய்யமாட்டேன்” என்று பேசியவர், சரியா வெளியில் போகணும் எடுத்து வந்துயிருக்கியா? என்று கேட்க, 50 ஆயிரம் எடுத்து வந்திருக்கேன் என்று 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளை 25 எடுத்து கொடுத்தார் குமரேசன். டி.எஸ்.பி. உஸ்மான் அலி கையில் வாங்கி எண்ணும் போது, காத்திருந்த ஊழல் தடுப்பு போலீஸார், கையும் களவுமாக பணத்துடன் மடக்கி பிடித்து, அலுவலகத்தில் சோதனை செய்து லஞ்சப்பேயை கைது செய்தனர். விஜிலன்ஸ் ஆபிஸர் பாலசுப்பிரமணியன் மிக நேர்மையான அதிகாரி என்றும் அதனால் இந்த விசயத்தில் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார் என்றும் பாராட்டுகிறார்கள் அப்பகுதியினர்.

 -ஈஸ்வர் பாண்டி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response