அரசியல்
Now Reading
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு நாளை முதல் வழங்கப்படும்
0

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு நாளை முதல் வழங்கப்படும்

by editor sigappunadaJanuary 8, 2017 1:21 pm

 

நேற்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து சென்னையில் பெரம்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி, சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

ஊழியர்கள் கடையை திறந்ததும் ஒருவருக்கொருவர் பொங்கல் பரிசு வாங்குவதற்கு முண்டியடித்தனர். ஆனால் பொங்கல் பரிசு பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள், ‘அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இன்று  மாலைக்குள் அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டு விடும். குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது ‘ என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response