மாவட்டம்
Now Reading
ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி- முன்னோடியாக உ.பி
0

ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி- முன்னோடியாக உ.பி

by editor sigappunadaApril 5, 2017 10:43 am

வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. ஆனால் எந்த போராட்டமும் செய்யாத உ.பி விவசாயிகளின் ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று லக்னோவில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் உபி முதல்வர் இந்த அறிவிப்பை அதிரடியாக அறிவித்தார். இதனால் உபி மாநில விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த ஒரே அறிவிப்பால் 2 கோடியே 15 லட்சம் விவசாயிகள் நேரடியாக நலம்பெறுவார்கள் என்றும்,7 லட்சம் பேர் மறைமுகமாக பலன்பெறுவார்கள் என்றும் உத்தரப்பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response