மாவட்டம்
Now Reading
ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – சிக்கிய புகாரி குழுமத்தினர்
0

ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – சிக்கிய புகாரி குழுமத்தினர்

by editor sigappunadaJanuary 5, 2017 12:48 pm

சென்னையில் இ.டி.ஏ. குழுமம் மற்றும் புகாரி குழுமம் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொகுசு பங்களாக்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், தங்கம் விற்பனை, மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் சோதனை நடந்தது.

இந்த குழுமத்துக்கு சொந்தமான வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், அதன் தலைவர் அப்துல் காதர், ஏ.ரஹ்மான் புகாரியின் வீடு, கிரசண்ட் பொறியியல் கல்லூரி, மீனம்பாக்கத்தில் உள்ள டிரான்ஸ் கார் ஷோரூம், வோக்ஸ்வேகன் கார் டீலர் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள புகாரி டவர், மயிலாப்பூர் சிட்டி சென்டர், அப்துல் காதீர் உறவினரின் சொகுசு பங்களா ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

நேற்று முதல்நாள் நடந்த சோதனையில் புகாரி குழுமம் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இன்றும்  புகாரி குழும நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

இதே போல் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததும், நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
50%
வருத்தம்
0%
கோபம்
50%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response