மாவட்டம்
Now Reading
ரூ.10 நாணய மாலை அணிந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்த இளைஞர்
0

ரூ.10 நாணய மாலை அணிந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்த இளைஞர்

by editor sigappunadaJanuary 31, 2017 3:10 pm

சேலம் வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகக் கூறி, நாணயங்களை மாலையாக அணிந்து சேலம் ஆட்சியரிடம் இளைஞர் புகார் தெரிவித்தார்.

சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் . இவர் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் 10 ரூபாய் நாணயங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டும், நாணய மாலை அணிந்தபடி சேலம் ஆட்சியர் வா.சம்பத்திடம் நேற்று புகார் மனு கொடுத்தார்.

மனுவில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் அவ்வப்போது வெளியானதால் எனது கடைக்கு வந்தவர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை நான் வாங்கிக் கொண்டேன். என்னிடம் தற்போது ரூ.2 ஆயிரம் மதிப்புக்கு 10 ரூபாய் நாணயங்கள் உள்ளது. இந்த நாணயங்களை கடைகளில் கொடுத்து பொருள் கேட்டால், நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றபோது, வங்கி அதிகாரிகளும் நாணயங்களை வாங்க மறுத்துவிட்டனர்.

சிறிய அளவில் கடை நடத்தி வரும் எனக்கு ரூ.2 ஆயிரம் அளவுக்கு 10 ரூபாய் நாணயங் கள் முடங்கிவிட்டதால், கடையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, நாணயங்களை ரூபாயாக மாற்ற எனக்கு உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்யுங்கள். வங்கியில் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவித்தால், எனக்கு தகவல் கொடுங்கள்” என ஆட்சியர் கூறி அவரை அனுப்பி வைத்தார்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response