மாவட்டம்
Now Reading
ரியல் எஸ்டேட் படும்பாடு
0

ரியல் எஸ்டேட் படும்பாடு

by editor sigappunadaJanuary 17, 2017 6:22 pm

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியானது. இது வர்த்தகம் சார்ந்த அனைத்து துறைகளையும் நஷ்டத்துக்கு உள்ளாக்கியது. கறுப்புப் பணம் அதிகம் புழங்கும் துறையான ரியல் எஸ்டேட் துறையும் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இனி ரியல் எஸ்டேட் துறை சார்ந்த அனைத்து வர்த்தகங்களும் வெளிப்படையாக காசோலை அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் (அக்டோபர் – டிசம்பர்) காலாண்டில் குடியிருப்புகள் விற்பனை 50 சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளது. பண நெருக்கடி, வங்கிக் கடன் தாமதம் போன்ற காரணங்களாலும், மேலும் விலை குறைய வாய்ப்பிருப்பதாலும் வாடிக்கையாளர்கள் நிலம், குடியிருப்பு வாங்குவது கணிசமாக குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையோடு கட்டுமானத் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பத்திரப்பதிவில் மட்டும் ரூ.22,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response