மாவட்டம்
Now Reading
ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு தெரியுமா?
0

ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு தெரியுமா?

by editor sigappunadaApril 3, 2017 11:02 am

ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் அடிப்படை சம்பளம் இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் அடிப்படை சம்பளம் திருத்தியமைக்கப்பட் டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட சம்பளம் 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர் னர் அடிப்படை சம்பளம் ரூ.90,000 லிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த் தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி துணை கவர்னரின் அடிப்படை சம்பளம் ரூ.80,000 லிருந்து 2.25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. ஆனால் மற்ற வங்கிகளின் முதன்மை அதிகாரிகளை விட ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் சம்பளம் குறைவாக இருப்பதால் அடிப் படை சம்பளம் உயர்த்தப்பட்டுள் ளது.

முன்பு அடிப்படை சம்பளம் 90,000 மாக இருந்ததால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலின் மொத்த சம்பளம் 2,09,500 ரூபாயாக இருந்தது. தற்போது அடிப்படை சம்பளம் உயத்தப்பட்டதால் மொத்த சம்பளம் 3.70 லட்ச ரூபா யாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் படேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற் றார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தார். ஆனால் அவருக்கு இந்த விதி பொருந்துமா என்பது குறித்த விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

ரகுராம் ராஜன் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப் பேற்றார். அப்போது அவருக்கு மாதச் சம்பளமாக ரூ.1.69 லட்சம் வழங்கப்பட்டது. பின்பு சம்பளம் மூன்றுமுறை திருத்தியமைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response