மாவட்டம்
Now Reading
ராம மோகன் ராவ் அமைதியாக இருப்பது நல்லது: வெங்கய்யா நாயுடு!
0

ராம மோகன் ராவ் அமைதியாக இருப்பது நல்லது: வெங்கய்யா நாயுடு!

by editor sigappunadaDecember 28, 2016 6:25 pm

தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டுக்கு துணை ராணுவப்படை பயன்படுத்தப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதினார். தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இந்த ரெய்டுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறதா என்கிற விவாதங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று ஊடகங்களிடம் பேசிய ராம மோகன் ராவும் இந்த ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். இந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இது குறித்து பதிலளிக்கும் போது “தமிழகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை.

வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கடமையை மட்டுமே செய்தார்கள். சோதனை சரியான முறையில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டில் நடைபெற்ற சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழக முதல்வரிடம்தான் கருத்துக் கேட்க வேண்டும்.

ராம மோகன் ராவ் தேவையற்றப் பிரச்சனைகளை எழுப்புகிறார். அதுபற்றிய கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரை எனக்கு நன்றாகத் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கருத்துக்களை அவர் பேச வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன். இந்த விவகாரத்தில் அவர் அமைதியாக இருப்பதே நல்லது. இல்லையென்றால் மேலும் சிக்கலாக மாறிவிடும். அவரது வீட்டில் இருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றால் சட்டம் இருக்கிறது. சட்டத்தை அனுகி அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response