மாவட்டம்
Now Reading
ராமர் கோயில் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு -தொகாடியா உறுதி
0

ராமர் கோயில் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு -தொகாடியா உறுதி

by editor sigappunadaMarch 5, 2017 11:32 am

அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புவது தொடர்பான முடிவு ஒரு வாரத்துக்குள் எடுக்கப்படும் என விஷ்வ இந்து பரிஷத்தின் (விஹெச்பி) சர்வதேச தலைவர் பிரவீண் தொகாடியா உறுதிபட தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று அவர் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோதும், அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பப்படாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘‘ராமர் கோயில் கட்டுவதற்கான முடிவு ஒரு வாரத்துக்குள் எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையில் விஷ்வ இந்து பரிஷத் ஈடுபடும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டால் கோயில் கட்டுவதற்கான முடிவை ஒரு சில மணி நேரங்களிலேயே எடுக்க முடியும்’’ என்றார்.

மேலும் ‘‘ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பாகிஸ்தான், வங்க தேசம், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வசிக்கும் இந்துக்களை காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response