மாவட்டம்
Now Reading
ராமநாதபுரம் பகுதியில் மழை -விவசாயிகள் மகிழ்ச்சி
0

ராமநாதபுரம் பகுதியில் மழை -விவசாயிகள் மகிழ்ச்சி

by editor sigappunadaNovember 1, 2016 10:31 am

sadhguruspot-24thjuly2

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதமாக வெயில் வாட்டிவதைத்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தையொட்டி காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன்படி நேற்று இரவு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டதோடு மழை பெய்யும் அறிகுறியோடு இருந்தது. சிறிது நேரத்தில் கருமேகங்கள் திரண்டு பலத்த இடி மின்னலுடன் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது.

இரவில் பெய்ய தொடங்கிய இந்த மழையானது இடைவிடாமல் தொடர்ந்து அடைமழையாக கொட்டி தீர்த்தது. இரவு வெகுநேரம் வரை நீடித்த இந்த மழை நள்ளிரவில்தான் ஓய்ந்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மழை காரணமாக ஆங்காங்கே திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response