அரசியல்
Now Reading
ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன்
0

ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன்

by editor sigappunadaApril 12, 2017 12:56 pm

சமக தலைவர் சரத்குமார் வீட்டுக்கு நேற்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அவரிடம் வீட்டில் வைத்தே விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தேனாம் பேட்டை ஜெயம்மாள் தெரு மற்றும் தி.நகர் பவுல் அப்பாசாமி தெருவில் உள்ள ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர், தேனாம்பேட்டை ராடன் மீடியா அலுவலகத்துக்கு சரத் குமாரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் இரவு வரை தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நடிகை ராதிகாவுக்கு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response